Published : 16 Aug 2019 12:45 PM
Last Updated : 16 Aug 2019 12:45 PM

நெல்லை காவல் ஆணையர் உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

சென்னை,

தமிழகம் முழுவதும் நெல்லை காவல் ஆணையர் உள்ளிட்ட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். நெல்லை முழுவதும் கண்காணிப்பு கேமராவின்கீழ் கொண்டுவருவேன் என பேட்டி அளித்த நிலையில் பாஸ்கரன் மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்ட அதிகாரிகளும் அவர்கள் தற்போது வகித்துவரும் பதவியும்:

1.நெல்லை காவல் ஆணையராகப் பதவி வகிக்கும் என்.பாஸ்கரன் சென்னை செயலாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

2. படிப்புக்காக விடுப்பில் சென்று பணிக்குத் திரும்பியுள்ள தீபக்.எம்.தாமோர் நெல்லை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3. சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய உதவித் தலைவர்(ஏஐஜி) பணியில் இருந்த ரங்கராஜன் மாற்றப்பட்டு சென்னை சிபிசிஐடி-3 எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. சென்னை சிபிசிஐடி-3 எஸ்பி நிஷா பார்த்திபன் மாற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல் மாற்றப்பட்டு திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. கயல்விழி உளுந்தூர்பேட்டை, தமிழ்நாடு சிறப்புக்காவற்படை 10-வது பட்டாலியன் கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் சமீபத்தில் நெல்லையில் நடந்த முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகள் பிடிபடக் காரணமாக இருந்தார். நெல்லை காவல்துறையை நவீனமாக்கும் முயற்சியில் போக்குவரத்து காவல்துறைக்கு நவீன கருவிகளை அறிமுகப்படுத்தினார்.

நேற்று செய்தியாளர் சந்திப்பில் நெல்லை முழுவதும் 1,027 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் விரைவில் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஸ்கரன் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x