

'பாகுபலி' படத்தில் படைவீரனாக நடித்த மது பிரகாஷ் என்ற நடிகரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மது பிரகாஷ் மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
"தெலங்கானாவைச் சேர்ந்த பாரதி செவ்வாய்க்கிழமை மாலை அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்தவுடன் நாங்கள் அங்கு விரைந்துசென்று அவரது உடலை பிரேதப் பரிசோதானிக்கு மருத்துவமனை அனுப்பினோம். குற்றம் சாட்டப்பட்டுள்ள மது பிரகாஷை நாங்கள் பிடித்துவிட்டோம். அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்" என்று ராய்துர்கம் பகுதி காவல்துறை ஆய்வாளர் ரவீந்தர் கூறியுள்ளார்.
'பாகுபலி' படத்தில் படைவீரனாக சிறிய வேடத்தில் தோன்றிய மது பிரகாஷ் 2015-ஆம் ஆண்டு பாரதியை மணந்தார். தற்போது பாரதியின் தந்தை மதுபிரகாஷுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். வரதட்சணை கேட்டு தனது மகளைப் பல முறை துன்புறுத்தி அடித்துள்ளதாகவும், பாரதியின் தற்கொலையில் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மது பிரகாஷின் மீது 304பி பிரிவின் படி (வரதட்சணைக் கொடுமையால் மரணம்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.