

பெரம்பலூர்
பெரம்பலூர் தீரன் நகரைச் சேர்ந்த செல்வராசு(59), அரசுப் போக்கு வரத்துக் கழக நடத்துநராகப் பணி யாற்றி ஓய்வுபெற்றார். இவரது மகள் கீர்த்தனா(18), சேலம் மாவட் டம் வீரகனூரில் தனியார் பள்ளி யில் 2018-19-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2-வில் 1,053 மதிப்பெண் பெற்றார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு சென்னை தனியார் பயிற்சி மையத் தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நீட் தேர்வில் பங்கேற்று, 384 மதிப்பெண்கள் பெற்றார்.இந்நிலையில் எம்பிபிஎஸ் படிக்க விரும்பி விண்ணப்பித்தார்.
2 கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், கலந்தாய் வுக்கு வருமாறு இவருக்கு அழைப் புக் கடிதம் வரவில்லை. இதனால் கீர்த்தனா மிகவும் கவலையுடன் இருந்துவந்தாராம். இந்நிலையில், உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மனைவியை வழியனுப்ப செல்வ ராசு பேருந்து நிலையம் சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனி யாக இருந்த கீர்த்தனா தூக்கிட் டுத் தற்கொலை செய்து கொண் டாராம். இதுகுறித்து, போலீஸில் செல்வராசு அளித்த புகாரில் ‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைக்காத விரக்தியில் என் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்' என கூறியுள்ளார். அதன்பேரில், பெரம்பலூர் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.