Published : 01 Aug 2019 07:06 PM
Last Updated : 01 Aug 2019 07:06 PM

மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கிவீசப்பட்டு சிறுவன் பலி

சித்தரிப்புப் படம்

சென்னை அரும்பாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு விழுந்த சிறுவன்  சம்பவ இடத்திலே பலியானார்.

சென்னை அரும்பாக்கம் அசோகா நகரைச் சேர்ந்தவர் சரத்குமார் (16). அங்குள்ள பள்ளியில்  பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது வேலைத் தேடிக்கொண்டிருந்தார்.  இன்று காலை 6:50 மணி அளவில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அரும்பாக்கம், 100 அடி சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார். 

அப்போது மோட்டார் சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்து, திடீர் என்று நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார்,  கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

விபத்துக் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், சரத்குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை, 25000 அபராதம் என்கிற மோட்டார் வாகனச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் அமலுக்கு வந்த நிலையில் இதுபோன்ற சிறார்கள் மோட்டார் வாகனங்களை இயக்கி மரணமடையும் நிகழ்வு நடந்துள்ளது. புதிய சட்டத்துக்குப்பின் இதுபோன்ற நிகழ்வுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பது கேள்விக்குறியான ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x