

சவுதி அரேபியாவில் இருந்து விமானம் மூலம் வந்த பயணி களை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்தபோது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஷேக் (32), சென்னை யைச் சேர்ந்த ஷேக் தாவூத் (34) ஆகியோர் கொண்டு வந்திருந்த எல்இடி பல்புகளில் ரூ.50.32 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ எடை கொண்ட தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த திருச்சியைச் சேர்ந்த கமல்(52) என்பவரிடம் இருந்து ரூ.19.7 லட்சம் மதிப்புள்ள 548 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பாங்காக்கில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த இம்தி யாஷ் அகமது(22), ராமநாதபுரத்தைச் சேர்ந்த நூருல்லா(26) ஆகியோரிடம் இருந்து ரூ.25.8 லட்சம் மதிப்புள்ள 716 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் பயணிகளிடம் இருந்து ரூ.1.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.