Published : 30 Jul 2019 10:47 AM
Last Updated : 30 Jul 2019 10:47 AM

‘அன்சருல்லா’ தீவிரவாத அமைப்புக்கு நிதி கொடுத்தவர்கள் சிக்குகிறார்கள்: என்ஐஏ விசாரணையில் தகவல்

சென்னை

அன்சருல்லா தீவிரவாத அமைப் புக்கு நிதி கொடுத்தவர்கள் குறித்த ஆதாரங்கள் என்ஐஏ அதிகாரி களுக்கு கிடைத்துள்ளன.

‘அன்சருல்லா’ என்ற தீவிரவாத அமைப்பை இந்தியாவில் தொடங் குவதற்காகவும் அதற்கான நிதி மற்றும் ஆட்களை சேர்ப்பதற்காக வும் சிலர் முயற்சி செய்து வரு வதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து கொண்டே, அன்சருல்லா தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல் புரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த 14 பேர் இந்தியாவுக்கு நாடு கடத் தப்பட்டனர். அவர்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதி காரிகள் கைது செய்து, புழல் சிறை யில் அடைத்தனர். அவர்களை தங் களது காவலில் எடுத்து என்ஐஏ அதி காரிகள் விசாரணை நடத்தினர். அவர்களின் வீடுகளில் கைப்பற்றப் பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்து முடித்துள்ளனர்.

14 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அன்சருல்லா அமைப் புக்கு ஆதரவாக செயல்படும் வேறு சிலரின் தகவல்கள் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்தன. மேலும், இந்த 14 பேரையும் ஒருங் கிணைக்கும் பணியில் ஈடுபட்ட முக்கியமான ஒருவர் குறித்த தகவலும் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவர்களை கைது செய்யும் முயற்சியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் அசம்பாவிதசம் பவங்களை செய்யும் தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி கொடுக்க சில அமைப்புகள் தயாராக இருக் கின்றன. இந்த நிதியை பெறுவதற் காகவே புதிய தீவிரவாத இயக் கங்களை உருவாக்கி, அசம்பாவித சம்பவங்களை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றனர்.

இந்த நிதி கொடுக்கும் அமைப்பு களை கண்டறிந்து, அதை தடுக் கும் முயற்சியில் என்ஐஏ அதிகாரி கள் ஈடுபட்டனர். 14 பேரை காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், அன்சருல்லா தீவிரவாத இயக்கத் துக்கு நிதி கொடுத்தவர்கள் குறித்த விவரங்கள் உட்பட பல முக்கிய தகவல்கள் என்ஐஏ அதிகாரி களுக்கு கிடைத்தன.

தீவிரவாதிகளின் நிதி ஆதாரங்கள் குறித்து என்ஐஏ அதிகாரி களுக்கு சவுதி அரேபியா அரசும் சில தகவல்களை கொடுத்துள்ளது. அதை வைத்து, அன்சருல்லா அமைப்புக்கு இந்தியாவில் இருந்து நிதி கொடுத்த சில நபர்களை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் குறித்து தொடர்ந்து ரகசிய விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x