செய்திப்பிரிவு

Published : 29 Jul 2019 21:13 pm

Updated : : 29 Jul 2019 21:13 pm

 

முன்னாள் எம்பி குழந்தைவேலு மனைவி கொலை: 3.மாதத்துக்குப்பின் மகன் கைது

murder-of-wife-of-former-mp-kuzhandhai-velu-son-arrested-after-3-5-months

அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி, ஏப்ரல் மாதம் 14-ம் தேதி குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த அவரது மகன் இன்று டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெசன்ட் நகர், 6-வது அவென்யூவில் வசித்தவர்  குழந்தைவேலு. இவர் அதிமுகவில் எம்.பி யாக இருந்துள்ளார். இவரது மனைவி ரத்தினம். இவர்களுக்கு ப்ரவீன் என்கிற மகன் உள்ளார். லண்டனில் படித்துவருகிறார். குழந்தைவேலு சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனையடுத்து மனைவி ரத்தினம் தனியாக வசித்து வந்தார். மகன் பிரவீன் இங்கிலாந்திலிருந்து கடந்த மார்ச் மாதம் சென்னை வந்துள்ளார்.

 இவர் தனது தாய் ரத்தினத்திடம் சொத்து கேட்டு தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி இரவு கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் தாய் ரத்தினம் கொலையுண்டு கிடந்தார். மறுஎநாள் காலை உறவினர்கள் பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ரத்தினத்தின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகன் பிரவீனே தாயை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்தது. அவர் தலை மறைவாகிவிட்டார்.

அவரை கடந்த 3.5 மாதமாக போலீஸார் தேடி வந்த நிலையில் பிரவீன் டெல்லியில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை கைது செய்த தனிப்படை போலீஸார் டிரான்சிட் வாரண்ட் போட்டபின் சென்னை அழைத்து வருகின்றனர்.

சென்னையில் அவரிடம் நடக்கும் விசாரணையில்தான் அவரது தாயார் கொலை குறித்த முழுத்தகவலும் வெளியில் வரும். கொலைக்கான காரணமும் தெரியவரும். 

MurderWife of former MPKuzhandhai veluSon arrestedமுன்னாள் எம்பி குழந்தைவேலுமனைவி கொலைடெல்லியில் கைது

Popular Articles

You May Like

More From This Category

More From this Author