Published : 29 Jul 2019 11:49 AM
Last Updated : 29 Jul 2019 11:49 AM

மதத்தை மறைத்து திருமணம் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு

ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை தாரா ஷாதியோ. இவர் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றவர் ஆவார். கடந்த 2014 ஜூலையில் சக வீரரான ரஞ்சித் குமார் கோஹ்லியை, தாரா ஷாதியோ திருமணம் செய்தார்.

திருமணத்தின்போது தன்னை இந்து என்று ரஞ்சித் குமார் கோஹ்லி கூறி உள்ளார். சில நாட்களில் அவரது உண்மையான பெயர் ரஹிபுல் ஹாசன் கான் என்பது தெரியவந்தது. மேலும் தாராவை மதம் மாறும்படி கணவரின் குடும் பத்தினர் துன்புறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த 2014 ஆகஸ்டில் ராஞ்சி போலீஸ் நிலை யத்தில் தாரா புகார் செய்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு கடந்த 2015 மே மாதம் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. அந்த நீதிமன்றத்தில் ரஹிபுல் ஹாசன் கான் மீது நேற்று முன் தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது. அதில் மதத்தை மறைத்து திருமணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஹிபுல் ஹாசனுக்கு உதவியதாக மேலும் 4 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டது.

தாரா தொடர்ந்த வழக்கின் அடிப் படையில் கடந்த 2018 ஜூனில் ராஞ்சி குடும்ப நல நீதிமன்றம் அவ ருக்கு விவாகரத்து வழங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x