

மதுரை
முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலை வழக்கில் என்னை சிக்க வைத்து, திமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சதி நடக்கிறது என முன்னாள் கவுன்சிலர் சீனியம்மாள் குற்றம்சாட்டினார்.
நெல்லை மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி. அவரது கணவர், பணிப்பெண் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக திமுக முன் னாள் கவுன்சிலர் சீனியம்மாள் என்ப வரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரிக்க முடிவு செய்தனர். அதன் படி, மதுரை கூடல்நகரில் உள்ள மகள் வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சீனியம்மா ளிடம் நேற்று முன்தினம் போலீ ஸார் விசாரித்தனர்.
இதுகுறித்து முன்னாள் கவுன்சி லர் சீனியம்மாள் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
நெல்லையில் இருந்து வந்தி ருந்த போலீஸார், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு தொடர்பாக என்னி டம் விசாரித்தனர். எனது செல் போனை வாங்கி ஆய்வு செய்த னர். எனது கட்சியினர் ஓரிருவர் பேசியது பற்றி கேட்டனர். அவர் களைத் தொடர்ந்து, மதுரை கூடல் நகர் காவல் நிலையத்தில் இருந்து வந்த போலீஸாரும் என்னிடம் விசாரித்தனர்.
உமா மகேஸ்வரி, யாரிடமும் அதிகம் பேசமாட்டார். எனக்கும், அவரது கொலைக்கும் எந்த தொடர் பும் இல்லை. உடல்நலமின்றி கடந்த 6 மாதங்களாக மகள் வீட்டில் இருந்து மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறேன்.
திமுகவில் எனக்கு நல்ல பெயர் உள்ளது. எனது வளர்ச்சியை பிடிக்காதவர்களின் தூண்டுதலின் பேரில் என்னை சிக்க வைக்க பார்க் கின்றனர். எதையும் சட்டரீதியாக சந்திப்பேன். என்னை பிடிக்காத வர்கள் எனக்கு எதிராக தூண்டிவிட் டிருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை உள்ளிட்ட குற்றச்செயல் கள் அதிகரிப்பதால், திமுக நிர்வாகி யான என்னை இவ்வழக்கில் சிக்க வைத்து கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் நினைத்திருக்கலாம் என கருதுகிறேன்.
என்மீது புகார் கூறுவதன் மூலம் திமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த சதி நடக்கிறது. உண்மை குற்றவாளிகளை போலீஸார் துரிதமாக கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.