

மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே மாயமான பழமை யான 3 ஐம்பொன் சிலைகளை ஒரு மாதம் கழித்து கோயில் வாச லில் மர்ம நபர்கள் வைத்துச் சென்றுள்ளனர்.
மானாமதுரை அருகே இடைக் காட்டூரில் பல நூறு ஆண்டுகள் பழமையான கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஜூன் 18-ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி, கரியமாணிக்க உற்சவர் ஆகிய 3 ஐம்பொன் சிலைகள் மற்றும் ஒன்றரை பவுன் தங்க நகையை சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். ஒரு மாதத் துக்கு பிறகு நேற்று காலை மாயமான மூன்று ஐம்பொன் சிலை களும் கோயில் வாசலில் இருந் தன. இதைப் பார்த்த பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். சிலை களைப் பார்வையிட்ட, மானா மதுரை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: சிலைக் கடத்தல் குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். அவர்கள் சந்தேகத் தின்பேரில் ஒருவரை பிடித்துள்ள நிலையில், சிலைகளை கோயி லில் வைத்துவிட்டு சென்றுள்ள னர். இந்தக் கொள்ளையில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டி ருக்க வாய்ப்புள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர் என்றனர்.