

தேவகோட்டை
தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடு பட்டு, 2 ஆண்டுகளாக தப்பிவந்த வெளிமாநில கும்பலைச் சேர்ந்த 4 பேரை தேவகோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், தேவக் கோட்டையில் வணிக வளாகம், நகைப் பட்டறை, மருந்தகம், ஐஸ் நிறுவனம், டீக்கடை, காரைக்குடி அரிசிக்கடை என தொடர்ந்து கடந்த வாரம் திருட்டு சம்பவங்கள் நடை பெற்றன. இதனால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன் உத்தரவின்பேரில் தேவகோட்டை எஸ்ஐ மீனாட்சி சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸார் வணிக வளாகத் தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். திருட்டில் ஈடுபட்டது வெளிமாநிலத்தைச் சேர்ந்த கொள் ளைக் கும்பல் என்பது தெரிய வந்தது.
மேலும் தனிப்படை போலீஸா ருக்கு காரைக்குடி 100 அடி ரோட் டில் உள்ள தனியார் விடுதியில் அவர்கள் தங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு சென்று சோதனை நடத்திய போலீஸார் அறையில் தங்கி இருந்த கர்நாடக மாநிலம் மாசால் ராம் நகரைச் சேர்ந்த விஜயகுமார் மாலிக் (41), கணேஷ் மாலிக் (39), அசோக்மால் ஜெயின் (46), ராஜஸ்தான் மாநிலம் ஊல்தடியைச் சேர்ந்த சோஹைல் குலாப் பட்டான் (21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.70 ஆயிரம் மற்றும் அவர்கள் பயன் படுத்திய காரையும் பறிமுதல் செய்த னர்.
இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: இவர்கள் ஏற்கெனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் சிக்கி கைதாகி சிறையில் இருந்த போது நண்பர்களாகி உள்ளனர். விஜயகுமார் மாலிக், கணேஷ் மாலிக் ஆகிய இருவரும் சகோதரர் கள். காரில் ஊர், ஊராக சென்று கடைகளின் பூட்டுகளை உடைத்து பணம், நகைகளை திருடி வந்துள்ள னர்.
இவர்கள் 2 ஆண்டுகளில் தமிழ கம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட் டுள்ளனர். ஆனால், அவர்கள் திருடிய ஊர்களின் பெயர்களைச் சரியாக சொல்லத் தெரியவில்லை. காரில் பகலில் ஏதாவது ஓர் ஊருக் குச் சென்று நோட்டமிடுவது. இரவில், அந்த ஊரில் திருடுவது, இதுவே அவர்களது தொழில். பணம், நகைகளைத் தவிர வேறு பொருட்களை திருடுவது கிடை யாது.
காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் திருடிய நிலையில், காரைக்குடி விடுதியில் இருந்து வேறு ஊருக்குச் செல்லத் திட்டமிட்ட போது சிக்கினர். இவ்வாறு போலீ ஸார் கூறினர்.