

சென்னை
தடை செய்யப்பட்ட அன்சருல்லா தீவிரவாத அமைப்புக்கு ஆள் மற்றும் நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட 16 பேரும் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை மீண்டும் நீதிமன்ற காவலில் புழல் சிறை யில் அடைக்கப்பட்டனர்.
வளைகுடா நாடுகளில் பணிபுரி யும் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் அன்சருல்லா என்ற தீவிரவாத அமைப்பை தொடங்க இருப்பதாக வும் இந்தியாவில் சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் ஐக் கிய அரபு எமிரேட்டின் பாதுகாப்பு துறைக்கு தெரியவந்தது. இதில் தொடர்புடைய 14 பேரை சவுதி போலீஸார் விசாரணை நடத்தி இந்தியாவுக்கு திருப்பி அனுப் பினர். இதுகுறித்த தகவலை என்ஐஏ (தேசிய பாதுகாப்பு முகமை) அமைப்புக்கும் தெரிவித்தனர்.
அதன்படி, டெல்லி வந்த 14 பேரையும் கைது செய்து தனி இடத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் நாகையைச் சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது என்ற மேலும் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சில முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகினர். அவர்களை யும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் டெல்லியில் பிடிபட்ட 14 பேரையும் டிரான்சிட் வாரன்ட் அடிப்படையில் சென்னை அழைத்து வந்து கடந்த 10 நாட் களுக்கு முன்னர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். அவர்களுடன் தமிழகத்தில் பிடி பட்ட 2 பேரையும் சேர்த்து 16 பேரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 16 பேரின் காவல் நேற்று மாலையுடன் முடி வடைந்ததை அடுத்து அவர்களை மீண்டும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன் றத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செந்தூர் பாண்டியன் அவர்கள் அனைவரை யும் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 16 பேரும் புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் அதில் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய என்ஐஏ முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.