2 சிறுமிக்கு பாலியல் தொல்லை; உறவினர்கள் 8 பேர் கைது

2 சிறுமிக்கு பாலியல் தொல்லை; உறவினர்கள் 8 பேர் கைது
Updated on
1 min read

விழுப்புரம்

2 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத் தில் சிறுமியின் உறவினர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த 16-ம் தேதி 2-ம் வகுப்பு பயிலும் 7 வயதுடைய சிறுமி ஒருவர் மயங்கி விழுந்தார். சிறுமியை பரிசோதித்த ஜிப்மர் மருத்துவர்கள் அவர் கூட்டு பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து, புதுச்சேரி குழந்தைகள் நல கமிட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அச் சிறுமியின் 11 வயது சகோதரியும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது.

குழந்தை நலக் கமிட்டியின் விசாரணையில், 2 சிறுமிகளும் திண்டிவனம் அருகே ஒரு கிராமத் தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர் களுக்கு தந்தையும், தாயும் தனித் தனியாக 2-வது திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது. அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வந்த இச்சிறுமிகளை உறவினர்களான 10 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் குறித்து, விழுப்பு ரம் மாவட்டம் பிரம்மதேசம் போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுமிகளின் உறவினர்களான 8 ஆண்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் 45 வயதும், குறைந்த பட்சம் 21 வயதும் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 பேர் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே சென்னையில் இருந்து வந்த 5 பேர் கொண்ட குழந்தைகள் நலக்குழு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் 2 சிறுமிகள், அவர்களது தாயாரிடமும் விசாரணை நடத்தினர். சில மாதங்களாகவே 2 சிறுமிகளும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக குழந்தை கள் நலக்குழுவினர் தெரிவித்த னர்.

விசாரணைக்குப் பிறகு, 7 வயது சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நலக் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 11 வயது சிறுமிக்கு ஜிப்மரில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது.

இதுபோன்ற வழக்குகளில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உறவினர்களே குற்றவாளிகளாக இருந்தால் அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதால் குற்றவாளிகளைப் பற்றிய விவரங்கள், புகைப் படங்கள் வெளியிடப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in