

புதையலை தேடி வந்த ஒரு மர்ம கும்பல் சிவன் கோயிலில் சேவை புரிந்துக்கொண்டிருந்த 3 பக்தர்களை படுகொலை செய்து, அவர்களின் ரத்தத்தை சிவன் மீதும், புற்று மீதும் தெளித்து அங்கிருந்து தப்பியோடியது.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கதிரி அருகே உள்ள கார்த்தி கோட்டா பகுதியை சேர்ந் தவர்கள் சிவராமி ரெட்டி (72), இவரது சகோதரி கமலம்மா (75), உறவினர் சத்ய லட்சுமம்மா (70). இதில் சிவராமி ரெட்டி தம்பல பல்லியிலும், சத்ய லட்சுமம்மா பெங்களூரிலும் வசித்து வந்த னர். சத்ய லட்சுமம்மா அதே ஊரில் வசித்து வந்தார். இவர்கள் அனைவரும் சிவ பக்தர்கள் என்பதால், அதே ஊரில் உள்ள ஒரு பழமையான சிவன் கோயிலை இவர்கள் பாரமரித்து வந்தனர்.
இதனிடையே, நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் குரு பவுர்ணமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை யொட்டி, இவர்கள் சிவன் கோயிலை சுத்தப்படுத்தும் பணி யில் ஈடுபட்டனர். இதில், நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் ஒரு மர்ம கும்பல் இக்கோயிலுக்குள் புகுந்தது. அப்போது இவர்கள் மூவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் அந்த மர்ம கும்பல், 3 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. பின்னர், இவர்களின் ரத்தத்தை மூலவரின் மீதும், அங்குள்ள புற்றின் மீதும், கோயிலின் பின்புறமும் தெளித்து விட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. பின்னர் அதிகாலை அக்கோயிலுக்கு சென்ற பக்தர்கள், இவர்கள் மூவரும் படுகொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து,
இது குறித்து கதிரி போலீஸா ருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத் தியதில், புதையல் தேடி வந்த மர்ம கும்பல் இவர்களை கொலை செய்திருக்கலாம் என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.