ஆந்திர வியாபாரியை கடத்தி ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல் 2 பேர் கைது, 6 பேர் தப்பியோட்டம்
ஆந்திர மாநில வியாபாரியை காரில் கடத்தி, ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப் பட்டனர். தப்பியோடிய மேலும் 6 பேரை போலீஸார் தேடி வருகின் றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் ராம்ஜூ ரெட்டி (28). இவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். சங்கரன்கோவில் பகுதி யைச் சேர்ந்த ஒரு கும்பல், தங்களி டம் கடத்தல் தங்கம் அதிக அளவில் இருப்பதாகவும், அந்த தங்கத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளனர். அவர்களிடம் ராம்ஜூ ரெட்டி, தனக்கு ரூ.30 லட்சத்துக்கு தங்கம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அக்கும்பலின் பேச்சைக்கேட்டு சங்கரன்கோவிலுக்கு வந்த ராம்ஜூ ரெட்டியை, 8 பேர் கொண்ட கும்பல், காரில் ஏற்றிக்கொண்டு, பணத்தை கேட்டுள்ளனர். தங்கத்தை கொடுத் தால் பணம் தருவதாக ராம்ஜூ ரெட்டி கூறியுள்ளார். இதையடுத்து, அந்த கும்பல், ரூ.30 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று கூறி காரில் ஊர் ஊராக அழைத்துச் சென்று மிரட்டியுள் ளனர். அவரிடம் இருந்த 5 பவுன் நகை, ரூ.23 ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டனர்.
சேர்ந்தமரம் கிராமம் வழியாக நேற்று காலையில் கார் சென்ற போது ராம்ஜூரெட்டி கூச்சலிட்டு உள்ளார். சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த காரை சூழ்ந்து கொண்டனர். தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீஸார் விரைந்து வந்தனர்.
போலீஸாரைப் பார்த்ததும் அந்த கும்பல் ராம்ஜூரெட்டியை விட்டுவிட்டு தப்பியோடியது. அவர்களில் 2 பேரை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளத்தைச் சேர்ந்த வசந்தகுமார்(27), செந்தட்டியா புரத்தைச் சேர்ந்த முத்துகுமார்(35) என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், தப்பியோடிய 6 பேரை தீவிரமாக தேடி வரு கின்றனர்.
