

கிருஷ்ணகிரி அருகே 14 மாத ஆண் குழந்தையை 25 ஆயிரம் ரூாய்க்கு விற்ற தம்பதியினர் தலை மறைவாகியுள்ளனர். அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்(35) இவரது மனைவி முத்து (32). குமரேசன் பெயிண்டராக உள்ளார். முத்துவுக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவன் குழந்தைகள் உள்ள நிலையில் கணவரைவிட்டு பிரிந்து குமரேசனுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களுக்கு 14 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு என்றும் சரிவர வேலைக்கு போவதில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு குப்பத்திற்கு சென்று தனது 14 மாதம் குழந்தையை 25 ஆயிரம் ரூாய்க்கு விற்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் நல குழுமத்தினருக்கு தெரிவித்துள்ளனர். குழந்தைகள் நல குழும அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் குழந்தையை விற்பனை செய்ததை உறுதியாகியுள்ளது.
குழந்தைகள் நல குழுமத்தினர் குழந்தை விற்பனை குறித்து விசாரணை நடத்துவதையும், விவகாரம் பெரிதானால் கைது செய்யப்படுவோம் என அஞ்சிய குமரேசன், முத்து இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.