இளைஞர் மீதான தாக்குதல்: தட்டிக் கேட்டவர் கொலை - மர்ம கும்பலை தேடும் போலீஸ்

இளைஞர் மீதான தாக்குதல்: தட்டிக் கேட்டவர் கொலை - மர்ம கும்பலை தேடும் போலீஸ்
Updated on
1 min read

திருப்பூரில் வடமாநில இளைஞரை தாக்கிய நபர்களை தட்டிக்கேட்ட ஆறு பேரை மர்ம கும்பல் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: திருவண்ணாமலை மாவட் டம் செங்கம் பகுதியை அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமார். இவர், திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், நண்பர்கள் பார்த்திபன், வினோத் ஆகியோருடன் ஆண்டிபாளையம் பிரிவு அருகே மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த வழியாக தலையில் ரத்தம் வழிந்தபடி வடமாநில இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அதனை கண்டு அந்த இளைஞரிடம் அருள்குமார் விசாரித்தபோது, தன்னை 4 பேர் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் அந்த இளைஞரை தாக்க வந்த 4 பேர் கொண்ட கும்பலை தடுத்து நிறுத்திய அருள்குமார், எதற்காக வடமாநில இளைஞரை தாக்குகிறீர்கள்? என விசாரித்துள்ளார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் அருள்குமாரை குத்தினர். தடுக்க வந்த பார்த்திபன், விக்னேஷ், கார்த்திக், முருகன், ஏழுமலை ஆகிய 5 பேரையும் குத்திவிட்டு, தனியார் நிறுவன வாடகை காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அருள்குமார், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். படுகாய மடைந்தவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தை ஒட்டிய பகுதி களிலுள்ள கண்காணிப்பு கேமராக் கள் மற்றும் தனியார் நிறுவன வாடகை கார் ஓட்டுநர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து, மர்ம நபர்களை போலீஸார் தேடி வரு கின்றனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in