தனிப்படை காவலரை தாக்கியதாக பாஜக, தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் கைது

தனிப்படை காவலரை தாக்கியதாக பாஜக, தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: ​காவலரை தாக்​கிய​தாக பாஜக, தேமு​திக நிர்​வாகி​கள் உள்​ளிட்ட 5 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை நுங்​கம்​பாக்​கம் ஜெக​நாதன் சாலை​யில் உள்ள தனி​யார் மது​பான பார், நேற்று முன்​தினம் இரவு 11 மணியை கடந்​தும் செயல்​பட்​டுக் கொண்​டிருந்​தது.

அப்​போது, அங்கு ரோந்​துப் பணி​யில் இருந்த திரு​வல்​லிக்​கேணி துணை ஆணை​யரின் தனிப்படை காவலர் சலீம், மது​பான பாரை உடனடி​யாக மூடும்​படி கூறி​யுள்​ளார். அப்​போது, பாரினுள் மது அருந்​திக் கொண்​டிருந்த 5 நபர்​களை வெளியே வரும்​படி சலீம் கூறி​யுள்​ளார்.

இதனால் ஆத்​திரமடைந்த அந்த கும்​பல், சலீ​முடன் கடுமை​யாக வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளது. வாக்​கு​வாதம் முற்​றிய நிலை​யில், ஆத்​திரமடைந்த அவர்​கள் சலீமை தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

காயமடைந்த சலீம், இதுகுறித்து நுங்​கம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். புகாரின் அடிப்​படை​யில் உடனடி​யாக வழக்குப் பதிவு செய்த போலீ​ஸார், தாக்​குதலில் ஈடு​பட்ட 5 பேரை​யும் கைது செய்​தனர்.

அவர்​கள், குன்​றத்​தூரை சேர்ந்த பாஜக நிர்​வாகி ஜெக​நாதன் (51), அனகாபுத்​தூரை சேர்ந்த தேமு​திக நிர்​வாகி மகாதேவன் (56), மற்​றும் தனசேகர் (52), ரவி (50), சரவணன் (50) என்​பது தெரிய​வந்​தது. கைதானவர்​களிடம் போலீ​ஸார் தொடர்ந்​து​வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

தனிப்படை காவலரை தாக்கியதாக பாஜக, தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் கைது
சென்னையில் பிப்ரவரி இறுதிக்குள் புதிதாக 245 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்: அதிகாரிகள் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in