டிஜிட்டல் கைது மிரட்டல்: ரூ.48 லட்சம் மோசடி

டிஜிட்டல் கைது மிரட்டல்: ரூ.48 லட்சம் மோசடி
Updated on
1 min read

ஈரோடு: ஈரோட்​டில் ‘டிஜிட்​டல் கைது’ செய்​வ​தாக மிரட்டி ரூ.48 லட்​சம் மோசடி செய்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

ஈரோடு கச்​சேரி வீதி​யைச் சேர்ந்​தவர் தேவிபிர​சாத். கடந்த சில நாட்​களுக்கு முன்பு அவரது ‘வாட்​ஸ்​அப்’ எண்​ணுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை சிபிஐ அதி​காரி என அறி​முகப்​படுத்​திக் கொண்​டார். தேவிபிர​சாத்​தின் அடை​யாள அட்​டையைப் பயன்​படுத்தி பல சிம்​கார்​டு​கள் வாங்கி மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ள​தாக​வும், இதற்​காக அவரை ‘டிஜிட்​டல் கைது’ செய்​வ​தாக​வும் மிரட்​டி​யுள்​ளார்.

மேலும், வழக்​கில் இருந்து விடுவிக்க ரூ.48 லட்​சம் கேட்டுள்ளார். இதை நம்​பிய தேவிபிர​சாத், கடந்த 8-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பல்​வேறு தவணை​களில் ஆர்டிஜிஎஸ் மூலம் ரூ.48 லட்​சம் அனுப்​பியுள்ளார். பின்​னர் இது மோசடி என தெரிய​வந்​தது. இதையடுத்​து, ஈரோடு சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வரு​கின்​றனர்​.

டிஜிட்டல் கைது மிரட்டல்: ரூ.48 லட்சம் மோசடி
“ஈரானை நரகத்துக்கு அனுப்புவேன்” - ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in