திருவள்ளூர்: ஜாமீனில் வந்தவர் கொலை - 4 பேர் கைது

திருவள்ளூர்: ஜாமீனில் வந்தவர் கொலை - 4 பேர் கைது
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (25). எண்ணூர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றி வந்த ரஞ்சித், கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல் லாமல் புதியதாக கார் வாங்கி டிராவல்ஸ் நடத்த உள்ளதாக தமது குடும்பத்தாரிடம் கூறிவந்துள்ளார்.

மேலும் இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அண்மையில் சிறை யில் இருந்து நிபந்தனை ஜாமீ னில் வெளியே வந்த ரஞ்சித். மீஞ்சூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி தமது நண்பர் ஒரு வருடன் வெளியே சென்ற ரஞ் சித், இரவு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.

செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு ரஞ்சித், கிடைக்காத நிலையில் 20ம் தேதி காலை தோட்டக்காடு ஊர் எல்லையில் தனியார் நிலத்தில் முட்புதரில் உள்ள தண் ணீரில் ரஞ்சித் தலை, கை, கால்களில் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரஞ்சித், அதே ஊரை சேர்ந்த தினேஷ் என்பவரின் அக்கா மகள் ஆர்த்தியை காதலித் துள்ளார்.

ஆனால் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக தினேஷ் தமது நண் பர்களுடன் சேர்ந்து ரஞ்சித்தை கொலை செய்தது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து தினேஷ், விஷால், நவீன்ராஜ், விக்னேஷ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர் புடைய உதயா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in