

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தி, பல கோடி மோசடி நடந்துள்ளது தொடர்பாக, தொழிற்சாலை உரிமையாளர்கள் ராஜா, விவேக் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு மாற்றி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில், அரியாங்குப்பத்தைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன், பூத்துறை ஆனந்தராஜ், கோட்டக்குப்பம் குமரவேலு, முருங்கப்பாக்கம் செல்வராஜ் ஆகியோரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், என்.ஆர். காங். பிரமுகர் மணிகண்டன் போலி மருந்து தொழிற்லையின் பங்குதாரராக செயல்பட்டு வந்துள்ளார்.
முருங்கப்பாக்கம் செல்வராஜ் கணக்காளராகவும், ஆனந்தராஜ், குமரவேலு போலி மருந்துகளுக்கு லேபிள் ஒட்டும் பணியிலும் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.