காரைக்காலில் இருந்து இலங்கைக்கு ரூ.6 கோடி போதைப்பொருள் கடத்த முயன்ற 4 பேர் கைது

12 கிலோ கஞ்சாவும் பறிமுதல்
காரைக்காலில் இருந்து இலங்கைக்கு ரூ.6 கோடி போதைப்பொருள் கடத்த முயன்ற 4 பேர் கைது
Updated on
1 min read

காரைக்கால்: ​காரைக்​காலில் இருந்து இலங்​கைக்கு ரூ.6.08 கோடி மதிப்​பிலான 7.605 கிலோ போதைப் பொருளை கடத்த முயற்​சித்த 4 பேரை போலீஸார் கைது செய்​தனர்.

இதுகுறித்து காரைக்​கால் மாவட்ட எஸ்​எஸ்பி வினய் குமார் காட்கே நேற்று செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​ததாவது: வரும் 2029-ம் ஆண்​டுக்​குள் போதைப்​பொருள் இல்​லாத இந்​தியா என்ற பிரதமரின் இலக்கை நிறை​வேற்​றும் வகை​யில், காரைக்​கால் மாவட்ட காவல் துறை சார்​பில் தீவிர கண்​காணிப்பு மற்​றும் தடுப்பு நடவடிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இதன் ஒரு பகு​தி​யாக, கடந்த 5-ம் தேதி காரைக்​கால்​ மேட்டைச் சேர்ந்த நிஜந்​தன்​என்​பவரிடம் இருந்து 1.438 கிலோ போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டு, அவர் கைது செய்​யப்​பட்​டார்.

விசா​ரணை​யில், அவர் இதை இலங்​கைக்கு கடத்த முயன்​றதும், இதில், நிஜந்​தனின் மைத்​துன​ரான மயி​லாடு​துறை மாவட்​டம் தரங்​கம்​பாடியைச் சேர்ந்த ராஜேஷ், காரைக்​கால்​மேட்​டைச் சேர்ந்த பாக்​கிய​ராஜ் மற்​றும் அவரது கூட்​டாளி​யான இலங்​கை​யைச் சேர்ந்த அலெக்ஸ் ராபர்ட் ஜெரமி ஆகி​யோ​ருக்​கும் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து அவர்களும் கைது செய்​யப்​பட்​டனர். கைதான 4 பேரிடம் இருந்​தும் மொத்​தம் 7.605 கிலோ போதைப் பொருள், 3 செல்​போன்​கள், 3 இருசக்கர வாக​னங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இதன் தோராய​மான சந்தை மதிப்பு ரூ.6.08 கோடி ஆகும்.

இதே​போல, கீழ​வாஞ்​சூர் பகு​தி​யில் நடை​பெற்ற சோதனை​யில் மேலும் 4 பேர் கைது செய்​யப்​பட்டனர். அவர்​களிட​மிருந்து ரூ.5 லட்​சம் மதிப்​பிலான 10.84 கிலோ கஞ்​சா​வும், கோட்​டுச்​சேரி​ பகுதியில் சிக்கிய 3 பேர் கைது செய்​யப்​பட்டு அவர்​களிட​மிருந்து 1.3 கிலோ கஞ்​சா​வும் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு ரூ.6 கோடி போதைப்பொருள் கடத்த முயன்ற 4 பேர் கைது
“தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை” - திருமாவளவன் வருத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in