சென்னையில் பைக் திருடி திருவண்ணாமலையில் விற்பனை செய்த 3 பேர் கைது

சென்னையில் பைக் திருடி திருவண்ணாமலையில் விற்பனை செய்த 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: பைக்குகளை சென்​னை​யில் திருடி, திரு​வண்​ணா​மலை​யில் விற்​பனை செய்து வந்த 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். கொளத்​தூர், அஞ்​சுகம் நகர் 3-வது குறுக்கு தெரு​வில் வசித்து வருபவர் ஜெய​பாரதி (34).

தனி​யார் பள்ளி ஒன்​றில் ஆசிரிய​ராக பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 6-ம் தேதி இரவு, வீட்​டின் முன் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த இவரது பைக் திருடு​போனது. இது தொடர்​பாக ஜெய​பாரதி கொளத்​தூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் திரு​வண்​ணா​மலை மாவட்​டம், வந்​த​வாசி​யைச் சேர்ந்த ஜெகதீஷ் (19) என்​பவர் 2 சிறு​வர்​களு​டன் சேர்ந்து ஆசிரியர் ஜெய​பார​தி​யின் பைக்கை திருடியது தெரிய​வந்​தது.

இதையடுத்து கடந்த 18-ம் தேதி ஜெகதீஷ் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், அவரது கூட்​டாளி​களான 2 சிறு​வர்​கள் நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களிட​மிருந்து 6 பைக்​கு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்ட 3 பேரும் சென்னை மட்​டும் அல்​லாமல் பல்​வேறு இடங்​களில் பைக்​கு​களை திருடி அதை திரு​வண்​ணா​மலை பகு​தி​யில் விற்​பனை செய்து வந்​தது தெரிந்​தது. இதையடுத்​து, ஜெகதீஷ் சிறை​யில் அடைக்​கப்​பட்ட நிலை​யில், சிறு​வர்​கள் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னையில் பைக் திருடி திருவண்ணாமலையில் விற்பனை செய்த 3 பேர் கைது
திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in