சென்னை | கோயில் நிலத்தை விற்று ரூ.2,500 கோடி மோசடி: தனியார் கட்டுமான நிறுவனம் மீது போலீஸில் புகார்

சென்னை | கோயில் நிலத்தை விற்று ரூ.2,500 கோடி மோசடி: தனியார் கட்டுமான நிறுவனம் மீது போலீஸில் புகார்
Updated on
1 min read

சென்னை: அம்​பத்​தூரில் கோயில் நிலத்தை தனி​யார் நிலம் என பொய் கூறி விற்​று, 2,036 குடும்​பங்​களிடம் தனி​யார் கட்​டு​மான நிறு​வனம் ரூ.2,500 கோடிக்​கும் மேல் மோசடி செய்​த​தாக சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் குடி​யிருப்​பு​வாசிகள் புகார் கொடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து, குடி​யிருப்​பு​வாசிகள், சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் அளித்த புகாரில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: தெளி​வான பட்​டா, வில்​லங்​கம் இல்​லாத நிலம் என்று தனி​யார் கட்​டு​மான நிறு​வனத்​தின் விளம்​பரத்தை நம்​பி, அம்​பத்​தூரில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​புத் திட்​டத்​தில் 2,036 குடும்​பங்​கள் தங்​களது வாழ்​நாள் சேமிப்பு மற்​றும் வங்​கிக் கடன்​கள் மூலம் பல கோடி ரூபாய் முதலீடு செய்து வீடு​களை வாங்​கி​யுள்​ளன.

இந்த நிலை​யில், அந்த நிலம் தனி​நபர் சொத்து அல்ல. கடந்த 1974-ம் ஆண்​டிலேயே நீதி​மன்​றத் தீர்ப்​பின்​படி, அது இந்து சமய அறநிலை​யத் துறைக்​குச் சொந்​த​மான ஸ்ரீகர​பாத்ர சிவபிர​காச சுவாமிகள் சன்​னதி நிலை​யம் என்ற கோயில் சொத்து என்​பது உறு​தி​யாகி​யுள்​ளது.

கட்​டு​மான நிறு​வனம் 2006-ல் தற்​காலிக​மாகப் பெற்ற பட்​டாவை, வரு​வாய்த் துறை அதி​காரி​கள் நிலத்​தின் உண்​மைத் தன்​மையை ஆராய்ந்து கடந்த 2015, 2016, 2018-ல் அடுத்​தடுத்து ரத்து செய்​துள்​ளனர். ஆனாலும், உண்​மையை மறைத்​து, ரத்​தான பட்​டாவை வைத்​துக்​ கொண்டு பொது​மக்​களை அந்த நிறு​வனம் ஏமாற்​றி​யுள்​ளது.

இந்த சூழலில், கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த நிலத்தை கோயில் நிலம் எனப் பதிவுத் துறை வகைப்​படுத்​தி​யுள்​ள​தால், வீடு​களைப் பதிவு செய்​ய​வோ, அடமானம் வைக்​கவோ, விற்​கவோ முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. ரூ.2,500 கோடி வரை பணத்தை கொடுத்து வீடு வாங்​கிய​வர்​கள், இன்று கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

வீடு​களைத் தவிர்த்​து, மக்​களிடம் பராமரிப்​புக்​காக வசூலித்த ‘கார்​பஸ் ஃபண்ட்’ ரூ.30 கோடி, கிளப் ஹவுஸ் வைப்​புத் தொகை ரூ.30 கோடி என மொத்​தம் ரூ.60 கோடியை​யும் நிறு​வனம் முறை​கே​டாக பயன்​படுத்தி உள்​ளது.

எனவே, கட்​டு​மான நிறு​வனத்​தின் சொத்​துகளை உடனே கைப்​பற்​றி, எங்​கள் பணத்தை மீட்​டுத் தரவேண்​டும். இவ்​வாறு புகாரில் கூறப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து, சென்னை குற்​றப்​பிரிவு போலீ​ஸார் தீவிர வி​சா​ரணை மேற்​கொண்​டு வரு​கின்​றனர்​.

சென்னை | கோயில் நிலத்தை விற்று ரூ.2,500 கோடி மோசடி: தனியார் கட்டுமான நிறுவனம் மீது போலீஸில் புகார்
புற்றுநோய் பாதிப்பால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: பெரம்பூரில் தந்தை, மகன் பரிதாப உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in