

திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைத் சேர்ந்த 23 பேருக்கு நீதிமன்றம் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
திருப்பூர் மாநகரில் எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 23 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதுதொடர்பான 3 வழக்குகளில் வங்கதேசத்தைச் சேர்ந்த சலீம், ரிபோன், முகமது மிலோன், அப்துல் ஹக்கீம், முகமது அப்துஸ் மன்னன், முகமது ஆசிர் உட்டின், சஹீருல் இஸ்லாம், ரபியுள், முகமது ரூபெல், முகமது ரபீக்அலி, அப்துல் அமீன், முகமது ஜோஷிம் உட்டின், அபு ஹனீப், முகமது ஷபீகுல் இஸ்லாம், முகமது சிஃபான் மியா, முகமது துஹின்மியா, முகமது மிலோன், அசதுல் இஸ்லாம், முகமது சுவேல் ஹுசேன், முகமது சுஜோன் ஷேக், முகமது பப்லு, முகமது முசுத் ரானா, முகமது இமாம் ஹுசேன்ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்கினார். இதில் அனைவருக்கும் தலா 2 ஆண்டு சிறையும் சலீம், முகமது ரூபெல், முகமது சிபான் மியா ஆகியோருக்கு ரூ.12,000 அபராதமும் மற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.