தேனாம்பேட்டை நட்சத்திர விடுதியில் சூதாட்டம் - தொழிலதிபர்கள் உட்பட 22 பேர் கைது

தேனாம்பேட்டை நட்சத்திர விடுதியில் சூதாட்டம் - தொழிலதிபர்கள் உட்பட 22 பேர் கைது
Updated on
1 min read

தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சட்டவிரோதமாக லட்சக்கணக் கில் பணம் வைத்து சூதாட் டம் நடப்பதாக சென்னை மாநகர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தேனாம்பேட்டை தனிப்படை போலீஸார் நேற்று நள்ளிரவு அந்த நட்சத்திர விடுதிக்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு சொகுசு அறையில், முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமாத் துறையினர் அமர்ந்து சூதாடிக் கொண்டிருந்தனர்.

போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற 22 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் சூதாட்டத்துக்குப் பயன்படுத்திய பொருட்கள், ரூ.81,17,530 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 25 விலை உயர்ந்த செல்போன்கள், சூதாட்டப் பணத்தை எண்ணுவதற்காக பயன்படுத்தப்பட்ட பணம் எண்ணும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் தொழில் அதிபர்கள், முக்கியஸ்தர்கள் என்பது தெரிய வந்தது.

சினிமா மேக்கப்மேனாக பணிபுரிந்து வரும் சேகர் (66), ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கள் கபீர் (44), ரமேஷ் (52), நாகநாதன் (47), கட்டுமான தொழிலதிபர்கள் சேகர் (62), கலைச்செல்வம் (62), பிரபு (41) ஆகியோர் முக்கியமானவர்கள்.

மேலும், கிண்டி ரேஸ் கோர்ஸில் பணிபுரிந்து வரும் ராஜேஷ் (28), துணி வியாபாரிகள் மன்மோகன் ரெட்டி (42), சீனிவாசன் (43), சுந்தர் ராஜ் (33), நடராஜ் (36) மற்றும் சுப்பாரெட்டி (52), ராஜேந்திரன் (38), குணசேகரன் (31), நரசிம்ம மூர்த்தி (30), சேகர் (67), சீனிவாசன்(26), ஏழுமலை (56), ஜெயச்சந்திரன்(52), ஆனந்தன் (40) சேகர் (66) என 22 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது தேனாம்பேட்டை போலீஸார் சட்ட விரோதச் சூதாட்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேனாம்பேட்டை நட்சத்திர விடுதியில் சூதாட்டம் - தொழிலதிபர்கள் உட்பட 22 பேர் கைது
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in