ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 1 வரை தமிழகம் முழுவதும் 2,159 ரவுடிகள் கைது

ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 1 வரை தமிழகம் முழுவதும் 2,159 ரவுடிகள் கைது
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், குற்றச் செயல்களை தடுக்கவும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாநிலம் முழுவதும் தீவிர குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில், 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

இதில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2,159 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு நிலு

வையில் இருந்த 4,706 பிணையில் வரமுடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு, தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக விரோதிகள் மற்றும் தொடர் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்பி-களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 1 வரை தமிழகம் முழுவதும் 2,159 ரவுடிகள் கைது
396 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: அமைச்சர் ராஜ்மோகன் இன்று வழங்குகிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in