இலங்கை மன்னாரில் இருந்து தமிழகத்துக்கு ரூ.7 கோடி ஆம்பர் கிரீஸை கடத்த முயன்ற 2 பேர் கைது

இலங்கை மன்னாரில் இருந்து தமிழகத்துக்கு ரூ.7 கோடி ஆம்பர் கிரீஸை கடத்த முயன்ற 2 பேர் கைது
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை மன்​னாரில் இருந்து தமி​ழ​கத்​துக்கு ரூ.7 கோடி மதிப்​புள்ள திமிங்​கலம் உமிழ் நீரான ஆம்​பர் கிரீஸை கடத்த முயன்ற 2 பேரை அந்​நாட்டு கடற்​படை​யினர் கைது செய்​தனர்.

திமிங்​கலத்​தின் ஆம்​பர் கிரீஸ், உயர் ரக வாசனைத் திர​வி​யங்​கள் மற்​றும் விலை உயர்ந்த மது​பானங்​களில் நறுமணத்​துக்​காகப் பயன்​படுத்​தப்​படு​கிறது. மேலும், சில மருந்​துகள் தயா​ரிப்​ப​தி​லும் இது பயன்​படுத்​தப்​படு​கிறது. மிக​வும் அரி​தான இப்​பொருளை ‘கடல் தங்​கம்’ எனவும் அழைக்​கின்​ற​னர்.

இந்​நிலை​யில், இலங்கை கடற்​படை​யினர் ரோந்​துப் பணி​யின்​போது மன்​னாரில் சட்​ட​விரோத​மாக சேகரிக்​கப்​பட்டு தமிழக பகு​திக்​குக் கடத்து​வதற்கு தயார்​படுத்​தப்​பட்​டிருந்த நிலை​யில், 67 கிலோ திமிங்​கலம் ஆம்​பர் கிரீஸை பறி​முதல் செய்​தனர்.

இதுதொடர்​பாக இலங்கை மன்​னார் மாவட்​டத்​தைச் சேர்ந்த 2 பேரை அந்​நாட்டு கடற்​படை​யினர் கைது செய்​தனர். மேலும், இந்​தக் கடத்​தலில் தொடர்​புடையோர் குறித்​தும் விசா​ரித்து வரு​கின்​ற​னர். பறி​முதல் செய்​யப்​பட்ட திமிங்​கலம் ஆம்​பர் கிரீஸின் சர்​வ​தேச மதிப்பு சுமார் ரூ- 7 கோடி என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இலங்கை மன்னாரில் இருந்து தமிழகத்துக்கு ரூ.7 கோடி ஆம்பர் கிரீஸை கடத்த முயன்ற 2 பேர் கைது
“தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை” - திருமாவளவன் வருத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in