

சென்னை: நொளம்பூர் போலீஸார் நேற்று முன்தினம் அதே பகுதி அண்ணாமலை அவென்யூ சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் பையை சோதனை செய்தபோது, போதைக் காளான், போதை ஸ்டாம்ப் அகியவை இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் அதை வைத்திருந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் மோனிஷை கைது செய்தனர். இவர் கூரியர் மூலம் போதைப் பொருளை வாங்கியது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.