

சென்னை: எழும்பூர் போலீஸார் நேற்று அதிகாலை எழும்பூர், காந்தி இர்வின் சாலை, ஆவணக் காப்பகம் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரிடம் சென்று விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பைகளை சோதித்து பார்த்தபோது அதில், குட்கா மற்றும் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றை போலீஸார் உடனடியாக பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா மற்றும் கஞ்சாவை வைத்திருந்ததாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனருல் இஸ்லாம் (31), அதே மாநிலத்தைச் சேர்ந்த அபிதுல் இஸ்லாம் (22), இக்ராமுல் உசேன் (30), முகமது ஜுனேயத் (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் அசாம் மாநிலத்திலிருந்து சென்னைக்கு வேலைக்கு வந்ததும், குட்கா மற்றும் கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.