

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் அஜித் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் அஜித், லிவிங்ஸ்டன், நடிகை குஷ்பு, தமிழக இளம் செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட 11 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
வழக்கம்போல் டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் வாயிலாக இந்த மிரட்டல் கடிதம் வந்திருந்தது. மிரட்டல் விடுக்கப்பட்ட 11 பேர் வீடுகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வெறும் புரளி என்பதை உறுதி செய்தனர். முதல்வர் உட்பட பலரது வீட்டுக்கு மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.