

நாமக்கல்: பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறித் தொழிலாளர்களிடம் கிட்னி திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்புக் காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஸ்டாலின் மோகன் (48), ஆனந்தன் (45) ஆகியோர் கிட்னி விற்பனை செய்யும் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கிட்னி விற்பனை செய்யும் இடைத்தரகர் முத்துசாமி (45) என்பவரை சிறப்பு காவல் படையினர் கைது செய்தனர். அவரிடம் கிட்னி விற்பனை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.