முதல்வர், துணை முதல்வர் வீடுகளுக்கு குண்டு மிரட்டல்

முதல்வர், துணை முதல்வர் வீடுகளுக்கு குண்டு மிரட்டல்
Updated on
1 min read

சென்னை: முதல்வர், துணை முதல்வர் வீடு உட்பட 12 இடங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலக இ-மெயில் முகவரிக்கு நேற்று மர்ம இ-மெயில் வந்தது.

அதில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இல்லம், அடையார் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இல்லம், பாமக தலைவர் அன்புமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, `ஆடிட்டர்' குருமூர்த்தி, நடிகை த்ரிஷா ஆகியோருடைய வீடுகள், பிரபல சினிமா தயாரிப்பாளர் `ஆஸ்கார்' ரவிச்சந்திரனின் அசோக்நகர் அலுவலகம் என மொத்தம் 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீஸார் சோதனை நடத்தி வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, நடிகை த்ரிஷா ஆகியோரது இல்லத்துக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in