சென்னையில் 37 துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 37 துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

சென்னையில் உள்ள 37 துணை தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

கடந்த சில மாதங்​களாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், திரையுலக பிரமுகர்​களின் வீடுகள், பள்​ளி​கள், விமான நிலை​யங்​கள், தூதரகங்​கள் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ந்து குண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த நிலையில், சென்னை டிஜிபி அலு​வலக இ-மெ​யில் முகவரிக்கு நேற்று காலை ஒரு மின்​னஞ்​சல் வந்​தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜப்பான் துணை தூதரகம் உட்பட 37 நாடுகளை சேர்ந்த துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். 37 தூதரக அலுவலகங்களுக்கும் சென்ற போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், சந்தேகப்படும் பொருட்கள் எதுவும் சோதனையில் சிக்கவில்லை.

இதையடுத்து, குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் நேற்று முன்தினம் இலங்கை, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா உட்பட 20 துணை தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in