

சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு மிரட்டல் இ-மெயில் வந்தது.
இதையடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் தொழில்நுட்ப கருவிகளு டன் சென்று சோதனையிடப்பட் டது. ஆனால், சந்தேகப்படும்படி யான எந்தப் பொருட்களும் கண் டெடுக்கப்படவில்லை. எனவே புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, வெடி குண்டு மிரட்டலையடுத்து, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். ஆனால் அவர் உடனடியாக உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சோதனை முடிந்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே, நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. சோதனை முடிவில் அதுவும் புரளி என உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.