

சென்னை: அரும்பாக்கத்தைச் சேர்ந்த பட்டதாரி சேத்தன் (25). இவர் கிரிப்டோ கரன்சி வாங்க திட்டமிட்டிருந்தார். அப்போது, சேலத்தை சேர்ந்த சக்தி என்பவரது அறிமுகம் டெலிகிராம் மூலம் கிடைத்தது. அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும், தன்னிடம் கிரிப்டோ கரன்சி விற்பனைக்காக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை சேத்தன் தனது நண்பர்கள் வேலப்பன்சாவடியைச் சேர்ந்த எல்ஐசி முகவர் லாரன்ஸ், மும்பையைச் சேர்ந்த செந்தில் குமார் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த கிரண்குமார் ஆகியோரிடம் தெரிவிக்க, அவர்களும் கிரிப்டோ கரன்சி வாங்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, சக்தி கொடுத்த வங்கி கணக்குக்கு 3 பேரும் சேர்ந்து ரூ.26.55 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
போலீஸார் விசாரணை: ஆனால், அவர்களுக்கு அதற்கான கிரிப்டோ கரன்சி கொடுக்கப்படவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 3 பேரும் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.