

இம்பால்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டம் டி.கோனோம்பாய் கிராமத்தின் தலைவர் ஹாவோகிப் (50).
இவர், ஐக்கிய குகி தேசியப் படை தீவிரவாதிகளால் கடந்த திங்கட்கிழமை கடுமையாக தாக்கப்பட்டார். இதையடுத்து உள்ளூர் மக்கள் அவரை சூரசந்த்பூர் நகரின் பிரதான மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஹாவோகிப் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மணிப்பூரில் 20-க்கும் மேற்பட்ட குகி, ஜோமி மற்றும் ஹமார் தீவிரவாத குழுக்கள் மத்திய, மாநில அரசுகளுடன் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டன. இதில் ஐக்கிய குகி தேசியப் படை இடம்பெறவில்லை.