

இன்ஸ்டா பிரபல நடன கலைஞர் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் கடத்தி வந்து விற்பனை செய்ய வைத்தி ருந்தபோது மணவாள நகர் போலீஸார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர சிபிராஜ் (22). இவர் நடன கலைஞராக உள்ளார். ஈக்காடுதாங்கல் பகுதியில் நடனப் பயிற்சி பள்ளி நடத்தி வரும் நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இவர் நடனமாடி வீடியோக்கள் பதிவு செய்து பிரபலமடைந்து ஆயிரக் கணக்கானோர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
போலீஸார் சோதனை: இந்த நிலையில் நேற்று முனதினம் இரவு மணவாள் நகர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த சிபிராஜை மடக்கி சோதனை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சிபிராஜை சோதனை செய்ததில் அவரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 55 கிராம் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன். விலை உயர்ந்த 2 செலபோன்கள். இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
புழல் சிறையில் அடைப்பு: இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருவள்ளூரில் விற்பனை செய்வதற்காக மெத்தமபெட்டமைன் என்ற போதை பொருளை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிபிராஜ மீது வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தி புழல மத்திய சிறையில் அடைத்தனர்.