

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கார்த்திக் வீடு, தி.நகரில் உள்ள திரைப்பட இயக்குநர் அமீர் வீடு ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் இருவர் வீடுகளிலும் நேற்று சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.