செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும் ஆண்களை வீட்டுக்கு அழைத்து பணம் பறிப்பு - திருநங்கை உட்பட இருவர் கைது

செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும் ஆண்களை வீட்டுக்கு அழைத்து பணம் பறிப்பு - திருநங்கை உட்பட இருவர் கைது
Updated on
1 min read

செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும் ஆண்களிடம் பெண் போல பேசி, வீட்டுக்கு அழைத்து மிரட்டி பணம் பறித்த திருநங்கை உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உதயகுமார் (21). இவர், கொரட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் உதயகுமார் (21) கிரிண்டர் செயலி மூலம் அஸ்விதா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். கடந்த 9-ம் தேதி அஸ்விதா அழைத்ததன் பேரில், வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உதயகுமார் சென்றுள்ளார்.

வீட்டுக்கு சென்று நேரில் பார்த்த போது தான், செல்போன் செயலியில் உள்ள புகைபடத்தில் பார்த்த பெண் அவர் இல்லை என்பதும், அவர் ஒரு திருநங்கை என்பதும் உதயகுமாருக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த உதயகுமார், உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றார்.

இந்நிலையில், ஏற்கனவே வீட்டில் மறைந்து இருந்த இளைஞர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி உதயகுமாரிடம் இருந்து பணத்தை பறித்துவிட்டு, அங்கிருந்து அவரை அனுப்பி வைத்தார். இதுகுறித்து, உதயகுமார் அளித்த புகாரின் பேரில், வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், வளசரவாக்கத்தை சேர்ந்த திருநங்கையான முஸ்தபா என்ற அஸ்விதா (30) மற்றும் திருச்சியை சேர்ந்த தினேஷ்குமார் (28) என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் இருவரும் கிரிண்டர் செயலி மூலம் அறிமுகமான ஆண்களை வீட்டுக்கு அழைத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ.95,640 பணம், கத்தியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in