

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27ம் தேதி தவெக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த கூட்டத்தில் விஜய் பிரச்சாரத்தின் போது வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தவெகவினர் சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கவுதமன் கரூர் நகர காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், அடையாளம் தெரியாத தவெகவினர் சிலர் மீது நேற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.