புதுச்சேரி | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு வாழ்நாள் சிறை

புதுச்சேரி | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு வாழ்நாள் சிறை
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்​சேரி காராமணிக்​குப்​பத்தை சேர்ந்​தவர் சந்​தோஷ் என்ற தாமஸ் சந்​தோஷ் (38). இவர் 2021-ல் மனநிலை பாதிக்​கப்​பட்ட 15 வயது சிறுமியை துன்​புறுத்​தி, பாலியல் வன்​கொடுமை செய்​தார்.

இது தொடர்​பாக உருளை​யன்​பேட்டை போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் சந்​தோஷ் மீது வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்கு புதுச்​சேரி போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடந்​தது. வழக்கை விசா​ரித்த நீதிபதி சும​தி, குற்​றம்சாட்​டப்​பட்ட தாமஸ் சந்​தோஷுக்கு வாழ்​நாள் சிறை தண்​டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார். மேலும், சிறுமிக்கு ரூ. 4 லட்​சம் இழப்பீடு வழங்​கவும் அரசுக்​குப் பரிந்​துரை செய்​துள்​ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in