

சென்னை: திருவள்ளூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரிக்கு அரசுப் பேருந்தில் தினமும் சென்று வருவது வழக்கம். அதன்படி வழக்கம்போல் கடந்த புதன்கிழமை திருவள்ளூரிலிருந்து கோயம்பேடுக்கு பேருந்தில் பயணித்தார். அப்போது பேருந்திலிருந்த இளைஞர் ஒருவர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பிற பயணிகள் உதவியுடன் அந்த இளைஞரைப் பிடித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸாரின் விசாரணையில் பிடிபட்டது திருச்சியைச் சேர்ந்த ராகேஷ் (26) என்பதும், சென்னையில் வேளாண்மைத் துறையில் ஊழியராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.