

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறியில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் நாகராஜன். இவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாற்றுத் திறன் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
இதுதொடர்பாக, அரசு கலைக் கல்லூரி முதல்வர் கணேசன் மற்றும் கல்லூரி உள் விவகார விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, துறைரீதியான விசாரணை அறிக்கையை கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு கல்
லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் அனுப்பிவைத்தார். அதன்பேரில், பேராசிரியர் நாகராஜனை ‘சஸ்பெண்ட்’ செய்து கல்லூரிக் கல்வி ஆணையர் நேற்று உத்தரவிட்டார்.