பேருந்தில் நகை திருடிய திருப்பத்தூர் மாவட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது!
ஓடும் பேருந்தில் தங்க நகைத் திருடியதாக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோயம்பேடு நெற்குன்றம் ரெட்டித் தெருவைச் சேர்ந்தவர் வரலட்சுமி (50). இவர், கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி காஞ்சிபுரத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அரசு பேருந்து மூலம் கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தார். கோயம்பேடு வெங்காய மண்டி பேருந்து நிலையத்தில் வரலட்சுமி இறங்கினார். பேருந்தை விட்டு இறங்கிய பின்னர், தான் வைத்திருந்த பையை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த 5 பவுன் தங்க நகைத் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் இத் திருட்டில் ஈடுபட்டது திருப்பத்தூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நரியம்பட்டு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வசேகரன் மனைவி பாரதி (56) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் பாரதியை நேற்று கைது செய்த னர். விசாரணையில் பாரதி, திருப்பத்தூர் மாவட்டம், நரியம் பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பதும், திமுக வில் பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும், பாரதி மீது ஏற்கெனவே ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் 3 வழக்குகள் வேலூர் தெற்கு காவல் நிலை யத்தில்ஒருவழக்கு. திருப்பத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என மொத்தம் 10 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது.
