சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு திருவள்ளூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

குற்றவாளி செந்தில்
குற்றவாளி செந்தில்
Updated on
1 min read

திருவள்ளூர்: சென்னை, அம்பத்தூரில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்(35) என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, செந்திலை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, தற்போது திருவள்ளூர் மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், செந்தில் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை, திருவள்ளூர் மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி நேற்று அளித்தார்.

அதில், செந்திலுக்கு, சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in