

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்(35). இவரும், 21 வயது பெண்ணும் காதலித்தனர். இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பு காரணமாக அந்த பெண் பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை வரவழைத்து, கல்லாறில் உள்ள பழப்பண்ணைக்கு அழைத்துச் சென்று கல்லைப்போட்டு கொலை செய்தார். புகாரின்பேரில், சாயிபாபா காலனி போலீஸார் வழக்கு பதிந்து பிரசாந்தை கைது செய்தனர். கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரசாந்ததுக்கு கொலை பிரிவுக்கு ஒரு ஆயுள் தண்டனை, கடத்தல் பிரிவுக்கு ஒரு ஆயுள் தண்டனை, தடயங்களை மறைத்தலுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி பெ.க.சிவக்குமார் தீர்ப்பளித்தார். இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, பிரசாந்த் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.