கோவையில் பழனிசாமி கூட்டத்தில் அதிமுகவினரிடம் ரூ.2 லட்சம் திருடிய 6 பேர் கைது

கோவையில் பழனிசாமி கூட்டத்தில் அதிமுகவினரிடம் ரூ.2 லட்சம் திருடிய 6 பேர் கைது
Updated on
1 min read

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் விவசாயிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் கலந்துரையாடினார். இக்கூட்டத்தில், அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கராஜூடம் ரூ.1 லட்சம், நெல்லித்துறையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஆனந்திடம் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடினர்.

இதுதொடர்பான புகாரின்பேரில், மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துக்குரிய முறையில் சுற்றிய 6 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

அவர்கள், ரத்தினபுரியைச் சேர்ந்த ராஜா, திருவேற்காடைச் சேர்ந்த ராஜ், திருப்பதி புத்தூரைச் சேர்ந்த சுரேஷ், ரமேஷ், தருமபுரியைச் சேர்ந்த கோபால், திருச்சியைச் சேர்ந்த அருள்குமார் என்பதும், அதிமுக நிர்வாகிகளிடம் ரூ.2 லட்சம் திருடியதும் தெரியவந்தது. இவர்கள் 6 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in