

ஓசூரில் திருமணம் செய்ய மறுத்த பெண் பல் மருத்துவரை தாக்கிய மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் சானசந்திரத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகள் கிருத்திகா (25). இவர் ஓசூர் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அந்த மருத்துவமனையை நடத்தி வரும் மருத்துவர் அன்புச் செல்வன் (38) தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிருத்திகாவை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே நேற்று முன்தினம் இரவு அவரை அன்புச் செல்வன் தாக்கினார்.
இதில் காயமடைந்த கிருத்திகா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், ஓசூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து நேற்று அன்புச்செல்வனை கைது செய்தனர்.