Published : 07 Jul 2025 01:11 AM
Last Updated : 07 Jul 2025 01:11 AM

குடும்ப பிரச்சினையால் விபரீதம்: மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ தற்கொலை - நடந்தது என்ன?

நாமக்​கல்: நாமக்​கல் மோக​னூர் சாலை கலை​வாணி நகரைச் சேர்ந்​தவர் சுப்​பிரமணி​யன்​(55). இவர் திருச்​சி​யில் வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வல​ராகப் பணிபுரிந்து வந்​தார். இவரது மனைவி பிரமிளா (51). மோக​னூர் அரு​கே​யுள்ள ஆண்​டாள்​புரம் அரசு உயர்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரியை​யாகப் பணிபுரிந்து வந்​தார். இவர்​களது மகள் சம்​யுக்தா (25). மகன் ஆதித்யா (21).

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை நாமக்​கல் அருகே வகுரம்​பட்டி என்ற இடத்​தில் நாமக்​கல்​-கரூர் ரயில்வே தண்​ட​வாளத்​தில் சுப்​பிரமணி​யன் மற்​றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் உடல் சிதறிய நிலை​யில் இறந்து கிடந்​தனர். தகவலறிந்து வந்த சேலம் ரயில்வே போலீ​ஸார் இரு​வரின் உடல்​களை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக சேலம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். விசா​ரணை​யில், குடும்​பப் பிரச்​சினை காரண​மாக தம்​பதி ரயில் முன் பாய்ந்து தற்​கொலை செய்து கொண்​டது தெரிய​வந்​தது. தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தற்​கொலை எந்​தப் பிரச்​சினைக்​கும் தீர்வு இல்​லை. தற்​கொலை எண்​ணம் தோன்​றி​னால் உடனடி​யாக சினேகா தற்​கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்​கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் உதவி எண்- 022-25521111 ஆகிய​வற்​றில் தொடர்​பு​கொள்​ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x